தாஜ்மகாலில் வெளிநபர்கள் தொழுகை நடத்த தடை
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலில், வெளி நபர்கள் தொழுகை நடத்த, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.;
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலில், வெளி நபர்கள் தொழுகை நடத்த, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இங்கு, வெள்ளிக்கிழமை தோறும், ஆக்ராவைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துகின்றனர். இந்நிலையில், தாஜ்மஹால் 7 உலக அதிசயங்களில் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் அமர்வு, தொழுகை நடத்த பல்வேறு மசூதிகள் உள்ளன, தாஜ்மஹாலுக்கு ஏன் செல்ல வேண்டும் எனக் கூறி, தொழுகை நடத்த அனுமதி கோரிய, மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர்.