"குறைத்த மண்ணெண்ணெய் அளவை மீண்டும் வழங்க வலியுறுத்தல்" - சட்டப்பேரவையில் அமைச்சர் காமராஜ்
"போக்குவரத்து செலவே விலை பட்டியல் வேறுபாடுக்கு காரணம்";
தமிழகத்திற்கான குறைக்கப்பட்ட மண்ணெண்ணெய் அளவை மீண்டும் வழங்குமாறு, பிரதமருக்கு வலியுறுத்தப்பட்டு வருவதாக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் சட்டப்பேரவையில் தெரிவித்தார். அதேபோல், பண்ணை பசுமை காய்கறி கடைகளில், விலைபட்டியலின் வேறுபாட்டிற்கு போக்குவரத்து செலவே காரணம் எனவும் அவர் விளக்கம் அளித்தார். தி.மு.க உறுப்பினர்கள் அமுதம், சிந்தாமணி, ராஜேந்திரன் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் காமராஜ் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.