"தேர்தலில் முறைகேடுகளை தடுக்க முடியவில்லை" - முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி பேச்சு

தேர்தலில் முறைகேடுகளை தடுக்க முடியவில்லை என இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர் நஜிம் ஜைதி தெரிவித்துள்ளார்

Update: 2018-06-30 13:07 GMT
சென்னையில்  தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து  நடைபெற்ற கூட்டத்தில்  பேசிய அவர், வாக்குச்சாவடியை கைப்பற்றினால் தேர்தலை ரத்து செய்வதற்கான முழு அதிகாரம் தேர்தல் ஆணையத்திடம் உள்ளதாக  கூறினார். பணப்பட்டுவாடா  காரணமாக தேர்தல் நிறுத்தப்பட்டு, மீண்டும் தேர்தல்  நடைபெறும் போது முறைகேடு நடந்தால், தேர்தலை  ரத்து செய்வதற்கான அதிகாரம் இல்லை என்று நஜிம் ஜைதி  தெரிவித்துள்ளார். இந்த அதிகாரத்தை கேட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தும் இது வரை பலனில்லை என்றும் அவர் கூறினார்.  பணப்பட்டுவாடா காரணமாக 2016ஆம் ஆண்டு, தமிழகத்தில்  இரண்டு தொகுதிகளுக்கு  தேர்தல்  ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்பட்டதாகவும் அப்போது மீண்டும் முறைகேடுகள் நடந்த போதும், அதை  தடுக்க முடியவில்லை என்றும் தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தலை மையப்படுத்தி நஜிம் ஜைதி பேசினார்.
Tags:    

மேலும் செய்திகள்