யுஜிசிக்கு பதிலாக உயர் கல்வி ஆணையம்" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

பல்கலை கழக மானிய குழுவுக்கு பதிலாக, இந்திய உயர்கல்வி ஆணையம் கொண்டு வரப்பட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Update: 2018-06-28 12:05 GMT
இது தொடர்பாக தனது சமூகவலைதள பக்கத்தில்  அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  தற்போதுள்ள பல்கலைக் கழக  மானியக் குழுவுக்கு பதிலாக இந்திய உயர்கல்வி ஆணையம் கொண்டு வரப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அது தாக்கல் செய்யப்படும் என்றும் பிரகாஷ் ஜவடேகர் பதிவிட்டுள்ளார்.

இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த  வரைவு மசோதா பற்றிய கருத்துகளை கல்வியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஜூலை 7ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தெரிவிக்கலாம் எனவும் பிரகாஷ் ஜவடேகர் குறிப்பிட்டுள்ளார்.

உயர் கல்வியை ஒழுங்குபடுத்தும் அமைப்பான யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு 1953-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்