அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்.

அணை பாதுகாப்பு மசோதா தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

Update: 2018-06-26 12:13 GMT

அணை பாதுகாப்பு மசோதா தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்துடன், 


தமிழக சட்டப்பேரவையில், மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முதலமைச்சர் பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்துள்ளார்.


பிரதமருக்கு எழுதி உள்ள அந்த கடிதத்தில், மாநிலத்தின் உரிமைகள் பாதிக்கப்படும் வகையில் மசோதாவில் சில அம்சங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார்.


மேலும், அணை பாதுகாப்பு மசோதா விவகாரத்தில், மாநிலங்களை கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றும், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்