விண்வெளி துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவும் பெண்

விண்வெளி மற்றும் ஆராய்ச்சி துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்களை நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு அழைத்துச் செல்கிறார் தமிழகத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர்.

Update: 2018-06-26 05:02 GMT
சென்னையை சேர்ந்தவர் டாக்டர் ஸ்ரீமதி கேசன். ஸ்பேஸ் கிட்ஸ இந்தியா நிறுவனரான இவர் அறிவியல் ஆராய்ச்சி துறையில் விருப்பமுள்ள மாணவர்களுக்கு தன்னுடைய நிறுவனம் மூலம் ராக்கெட் மற்றும் செயற்கைகோள் தயாரித்தல் உள்ளிட்டவை குறித்து சிறப்பு பயிற்சி அளித்து வருகிறார். இவருடைய நிறுவனத்தின் மூலம் நடக்கும் தேர்வுகளில் சிறப்பிடம் பெறும் மாணவர்களை அமெரிக்காவில் இருக்கும் நாசா விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ரஷ்ய விண்வெளி மையத்திற்கு அழைத்து செல்கிறார். தேர்வு மதிப்பெண்ணில்  முதல் மூன்று இட்ங்களை பிடிக்கும் அரசு பள்ளி மாணவர்களை இலவசமாகவே நாசாவுக்கு அழைத்துச் செல்கிறார்  ஸ்ரீமதி கேசன்...  மற்ற மாணவர்களுக்கும்  பெரும்பாலும் 80 சதவிகித செலவை இவரே ஏற்றுக்கொள்கிறார். அதற்காக சில அமைப்புகளின் நிதி உதவியையும் பெற்றுக்கொள்கிறார்.

தமிழ்நாடு, பஞ்சாப், டெல்லி, கேரளா முதலிய மாநிலங்களில் இருந்து 1500 மாணவர்களை நாசா விண்வெளி மையத்திற்கு கல்வி பயணமாய் அழைத்துச் சென்றிருக்கிறார் ஸ்ரீமதி கேசன். இவர்கள் வைக்கும் தேர்வில் முதல் 3 தற்போது இவருடைய மாணவர்கள் நிலவில் கால் பதிக்கும் செயற்கைகோளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

லூனார் எக்ஸ்பிரைஸ் என்னும் நிறுவனம் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் விண்கலத்தை தயாரிக்கும் போட்டியை நடத்துகிறது. இந்த போட்டிக்கு உலக அளவில் 5 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இதில் இளமையான குழுவாக ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் குழுவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதில் 15 மாணவர்கள் அடங்கிய குழு விண்கலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வருடத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட உள்ளது. இந்த விண்கலத்தில் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு மேற்கொள்வதற்கான அதிநவீன தொழில்நுட்ப கருவிகளும் பொருத்தப்படுகிறது. 

அறிவியல் மற்றும் வானவியல் ஆராய்ச்சி துறையில் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக ஸ்ரீமதி கேசனின் செயல்பாடு அமைந்திருப்பதால் பல்வேறு நாடுகளில் இந்தியா சார்பாக  ஏராளமான விருதுகளை வென்றிருக்கிறார். 

உலகிலேயே சிறிய செய்ற்கைகோளான கலாம் சேட் ஐ வடிவமைத்தவர் இவருடைய ஸ்பேஸ் கிட்ஸ இந்தியாவின் 18 வயது மாணவர் Rifath Sharook.  விண்வெளியில் உள்ள தட்பவெட்பம், வாயுக்கள், அழுத்தம் போன்றைவை குறித்த தகவல்களை கலாம் செய்ற்கைகோள் வெற்றிகரமாக எடுத்து வந்திருக்கிறது.
Tags:    

மேலும் செய்திகள்