"அமித் ஷா இயக்குனராக உள்ள வங்கியில் பல கோடி டெபாசிட்" - புகார் குறித்து உரிய விசாரணை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இயக்குனராக உள்ள வங்கியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பழைய நோட்டுக்கள் முதலீடு செய்யப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

Update: 2018-06-22 10:39 GMT
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இந்த நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்யவும், மாற்றிக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் அமித் ஷா இயக்குனராக உள்ள அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் நவம்பர் 9 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை சுமார் 754 கோடி ரூபாய் அளவுக்கு நோட்டுக்கள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்