பணியிட மாற்றம் பெற்ற ஆசிரியர்கள் : வழியனுப்ப மறுத்து கெஞ்சி அழுத மாணவர்கள்

திருவள்ளூரில், இரு ஆசிரியர்கள் பணி மாறுதல் பெற்றுச் சென்றதை ஏற்காத மாணவர்கள் அவர்களை அனுப்ப மறுத்து கட்டிப்பிடித்து கெஞ்சிய காட்சி அனைவரையும் நெகிழச் செய்தது.;

Update: 2018-06-21 08:46 GMT
அங்குள்ள வெள்ளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 260 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இங்கு 5 ஆண்டுகளாக பணிபுரிந்த பகவான் மற்றும் சுகுணா ஆகிய இரு ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான ஆணையை பெற பள்ளிக்கு வந்தனர். இதனை அறிந்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, ஆசிரியர்களை கட்டிப்பிடித்து பள்ளியை விட்டு போகாதீர்கள் என்று கதறி அழுதனர். மாணவர்களை தேற்றிய ஆசிரியர், ஒரு கட்டத்தில் அவர்களின் அன்பை எண்ணி கண்ணீர் விட்டு அழுதனர். ஆசிரியர்கள் மீதான மாணவர்களின் பாசத்தை பார்த்த சக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் நெகிழ்ந்தனர். இந்த தகவலை அறிந்த திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், ஆசிரியர் பகவானின் பணியிட மாற்றத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்