ஊட்டி அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து - இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம்

ஊட்டி அருகே 500 அடி பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.

Update: 2018-06-15 15:44 GMT
ஊட்டி அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து - இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம்


அங்குள்ள மந்தலா பகுதியில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்த பேருந்து நடத்துநர் பிரகாஷ், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 10க்கும் மேற்பட்டோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.  முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.




Tags:    

மேலும் செய்திகள்