மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை விவகாரம் - சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் கருத்து

நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெறும் நிலையில், தனியார் மருத்துவக்கல்லூரிகள் பணம் வாங்கிக் கொண்டு தகுதி குறைந்த மாணவர்களுக்கும் இடம் அளிப்பதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள்

Update: 2018-06-11 11:55 GMT
நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை  நடைபெறும் நிலையில், தனியார் மருத்துவக்கல்லூரிகள் பணம் வாங்கிக் கொண்டு தகுதி குறைந்த மாணவர்களுக்கும் இடம் அளிப்பதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள்

ரவீந்திரநாத், மருத்துவர் சங்கம்

நேரடியாக மாணவர் சேர்க்கை நடத்த தனியார் மருத்துவக்கல்லூரிகளை அனுமதிக்க கூடாது. கடந்த ஆண்டு 5ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன, கடைசி நேரத்தில் மத்திய அரசு அனுமதி அளித்தது. குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் பணம் கொடுத்து சேர்ந்தனர்.

சுமந்த் சி.ராமன், சமூக ஆர்வலர்

அரசு மருத்துவ கல்லூரிகள் தரம் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகம். கட்டணமும் தனியார் கல்லூரிகளை விட 25 மடங்கு குறைவு.அதிக கட்ஆப் மதிப்பெண் பெற்றவர்களும் அரசு கல்லூரிகளை தான் விரும்பினார்கள். பணம் தீர்மானிப்பது என்ற வாதம் முறையானது அல்ல

Tags:    

மேலும் செய்திகள்