வருத்தப்படாத வாலிபர் சங்க பட இயக்குநரின் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கும் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன்?

Update: 2024-03-22 21:50 GMT

வருத்தப்படாத வாலிபர் சங்க பட இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கேப்டன் விஜயகாந்துக்கு தனது மகன் சண்முகபாண்டியனை தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி ஹீரோவாக உருவாக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இந்தநிலையில், சண்முக பாண்டியனை வைத்து சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இயக்குனர் பொன்ராம் ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா போன்ற படங்களை இயக்கி உள்ளார். விரைவில் இப்படத்தை பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags:    

மேலும் செய்திகள்