"இந்த பாடல் என் குழந்தைக்கு "- நடிகை அமலாபால் பெருமிதம்

லெவல் கிராஸ் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ள அமலா பால் "தனது பாடல் தனக்கு வரவிருக்கும் குழந்தைக்கு பரிசு" -நடிகை அமலாபால் பெருமிதம்

Update: 2024-05-26 23:34 GMT

லெவல் கிராஸ் படத்தில் நடிகை அமலா பால் ஒரு பாடலை பாடியுள்ள நிலையில், இந்த பாடல் தனக்கு வரவிருக்கும் குழந்தைக்கு பரிசு என்று அவர் தெரிவித்துள்ளார். மலையாளஅறிமுக இயக்குனர் அர்பாஸ் அயூப் இயக்கத்தில் ஆசிப் அலி மற்றும் அமலா பால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் லெவல் கிராஸ். விஷால் சந்திரசேகர் இசையமைத்த இந்த படத்தில் அமலா பால், முதல் முறையாக பின்னணிப் பாடகியாகி இருக்கிறார். அவர் பாடிய பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், விளம்பர செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமலா பால், நான் பாடிய பாடல் தனது குழந்தைக்கு பரிசு என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்