கடைசி படமான `தி கோட்' படத்திற்கு விஜயின் சம்பளம் இவ்வளவு கோடியா! - அதிக சம்பளம் பெறும் நடிகர்?

Update: 2024-03-24 02:07 GMT

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், 2 படங்களுடன் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். விஜய் இதுவரை 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த நிலையில், தற்போது நடித்துவரும் The GOAT படத்திற்காக 200 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் நடிக்கும் கடைசி படத்தில் அவருக்கு 250 கோடி ரூபாய் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில், இந்திய அளவில் அதிக சம்பளம் பெறும் நடிகர் என்ற பெருமையை விஜய் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்