சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் கலகலப்பு - 3 சிவா, விமல், வாணி போஜன் ஆகியோர் ஒப்பந்தம் என தகவல்

Update: 2024-05-25 14:07 GMT

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை புரிந்துள்ளது. இந்நிலையில் கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்திற்கான பணிகளை சுந்தர்.சி தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் பாகம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், இரண்டாவது பாகம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்நிலையில் கலகலப்பு மூன்றாம் பாகத்தில் சிவா, விமல், வாணி போஜன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும், படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்