எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக்-ல் நடிக்கப்போவது யார் ?லிஸ்டில்..திரிஷா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா !

Update: 2024-05-24 16:20 GMT

கர்நாடக இசையில் ராணியாக கோலோச்சிய பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க, முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூர் ப்ரொடக்‌ஷன் ஹவுஸ் என்ற நிறுவனம் எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க திட்டமிட்டு வரும் நிலையில், தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் திரிஷா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகைகளுடன் பேச்சுவார்த்தை முன்னெடுத்துள்ளனர். இதில் நயன்தாரா மீது அதிக கவனம் இருப்பதாக சொல்லப்பட்டாலும், மகாநதி படத்தில் நடிகை சாவித்ரி கதாபாத்திரத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் இந்த வாய்ப்பை தனதாக்கி கொள்வார் என திரைத்துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்