"சலார் 2" பற்றி பரவிய தகவல்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு | Salaar 2 | Thanthitv

Update: 2024-05-26 13:15 GMT

சலார் 2 திரைப்படம் கைவிடப்படுவதாக சமீபமாக இணையத்தில் தகவல்கள் பரவிய நிலையில் படக்குழு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது... கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான சலார் திரைப்படத்தைத் தொடர்ந்து, சலார் 2 உருவாக உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் பிரசாந்த் நீல், பிரபாஸ் இடையே சண்டை ஏற்பட்டதால் அப்படம் கைவிடப்படுவதாகத் தகவல்கள் பரவின. ஆனால் பிரசாந்த் நீலும் பிரபாசும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, "சிரிப்பை அடக்க முடியவில்லை" என்ற வாக்கியத்துடன் சலார் படக்குழு சமூக வலைதளத்தில் பதிவிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்