மீண்டும் இணையும் நெல்சன் - நயன் வெற்றி கூட்டணி?

Update: 2023-10-30 23:40 GMT

நயன்தாரா, நெல்சன் கூட்டணி மீண்டும்

இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'ஜவான்' பட வெற்றியை தொடர்ந்து 'அன்னபூரணி', 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960', 'கமல் 234' என பல படங்களில் நயன்தாரா பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் 'கோலமாவு கோகிலா' படத்தை அடுத்து மீண்டும் நயன்தாராவை கதையின் நாயகியாக வைத்து ஒரு பான் இந்தியா படத்தை இயக்க நெல்சன் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. நயன்தாராவும் நெல்சன் உடன் இணைந்து மீண்டும் ஒரு ஹிட் கொடுக்க தயாராக இருப்பதாகவும், இந்த படத்திற்கும் அனிருத் இசை அமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்