"புஷ்பா 2" படத்தின் 2-வது சிங்கிள் வீடியோ... நாளை காலை வெளியிடப்போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

Update: 2024-05-22 17:41 GMT

"புஷ்பா 2" திரைப்படத்தின் 2-வது சிங்கிள் வீடியோ நாளை காலை வெளியாகவுள்ளது. நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள, புஷ்பா 2 திரைப்படம் இந்தாண்டு ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான புஷ்பா 2 படத்தின் முதல் சிங்கிள் வீடியோ அமோக வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், படத்தின் இரண்டாவது சிங்கிள் வீடியோ நாளை காலை 11 மணிக்கு வெளியிடப் போவதாக தயாரிப்பு நிறுவனமான, மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்