ரவுடியை காதலித்த இளம்பெண்.. `ஜமாலிகூடா'.. இன்று இரவு 9 மணிக்கு தந்தி 1ல்

Update: 2024-05-27 12:47 GMT

பிரபல கன்னட இயக்குநர் குஷல் கெளடா இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'once upon a time in jamaligudda'. இப்போது தந்தி ஒன் தொலைக்காட்சியில் தமிழில் வெளியாகிறது.

90 களில் நடப்பது போன்று கதைக்களம் கொண்ட இந்த படத்தில் சாண்டல்வுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான தனஞ்செயா ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அதிதி பிரபுதேவா நடித்துள்ளார்.

ஒரு மசாஜ் பார்லரில் வேலை பார்த்துவரும் நாயகிக்கும், வேலைவெட்டி இல்லாமல் ரௌடிதனம் செய்து கொண்டு சுற்றித்திரியும் நாயகனுக்கும் இடையே ஒரு மென்மையான காதல் பிறக்கிறது. இதற்கிடையே நாயகியின் மசாஜ் பார்லரில் நடக்கும் ஒரு கொலை இவர்களின் வாழ்க்கையில் பல நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது. அதிலிருந்து இருவரும் எப்படி மீள்கிறார்கள் என்பதே படத்தின் கதை.

எளிமையான காதல் கதையை ஆக்‌ஷன், ரொமான்ஸ், அதிரடி திருப்பங்கள் என அவருக்கே உரிய பானியில் சுவாரஸ்யமாக கொடுத்துள்ளார் இயக்குனர் குஷல் கௌடா.

கன்னட மொழியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த இந்த படத்தின் தமிழ் வெர்ஷன் உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில். இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள். Thanthione App, YouTube மற்றும் ThanthiOne.Com-மிலும் பார்த்து மகிழுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்