ஐரோப்பாவில் ரீ-ரிலீஸாகும் மாஸ்டர் திரைப்படம் கொரோனா தொற்றால் தள்ளிப்போன 'ரிலீஸ்'

Update: 2024-05-24 17:14 GMT

நாநடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஐரோப்பிய டுகளில் ரீ-ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய், மாளவிகா மோகன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த மாஸ்டர் திரைப்படம், 2021ம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஐரோப்பாவில் வெளியாகவில்லை. மாஸ்டர் திரைப்படத்தின் ஓவர்சீஸ் உரிமையை ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் கைப்பற்றி இருந்த நிலையில், தற்போது படத்தை ஐரோப்பாவில் திரையிடவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ரீ-ரிலிசாகி வசூலை அள்ளிய கில்லி திரைப்படம் போல, ஐரோப்பாவில் மாஸ்டர் படம் மாஸ் காட்டுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்