இந்தியன்-2 படப்பிடிப்பு காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரல்.. காவல் ஆணையர் அலுவலகத்தில் படக்குழு சார்பில் புகார்

Update: 2024-03-04 23:42 GMT

இந்தியன்-2 படப்பிடிப்பு காட்சிகளை சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி விட்டதாக, காவல் ஆணையர் அலுவலகத்தில் படக்குழு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


இயக்குனர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன்-2 திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சி, பட்டினப்பாக்கம் லூப் சாலையில் கடந்த வாரம் படமாக்கப்பட்டது. அங்குள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சுவர்களில் இந்தியன் தாத்தா ஓவியங்கள் வரையப்பட்டு, சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், ஜெகன் ஆகியோர் படப்பிடிப்பில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், படப்பிடிப்பு காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் படக்குழு சார்பில் சக்திவேல் என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பை மர்ம நபர் சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலை தளங்களில் பரப்பி விட்டதாகவும், இதனை உடனடியாக நீக்கி விட்டு, சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்