மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ் ?கண்மணி அன்போடு பாடலை பயன்படுத்தியதற்கு நோட்டீஸ் ?

Update: 2024-05-24 16:27 GMT

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில், குணா படத்தின் கண்மணி அன்போடு காதலன், பாடல் இடம்பெற்றிருந்தது. இந்த பாடலுக்கு உரிய அனுமதி பெறவில்லை என படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு, இளையராஜா சார்பில் வழக்கறிஞர் சரவணன் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகி, பேசு பொருளானது.

பதிப்புரிமை சட்டப்படி, பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் அல்லது உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என நோட்டீஸ் மூலம் வலியுறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த படத்தின் ஆரம்பப் பணிகளில் இருந்து அனைத்தும் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டதாகவும், அந்த வகையில் பாடலுக்கான உரிமை பெறப்பட்டு அதற்கான தொகையும் கொடுக்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குநர் சிதம்பரம் விளக்கமளித்துள்ளார். இணையத்தில் பரவி வரும் தகவல் பொய்யானது என்றும், இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் எந்தவித அறிக்கையும் வந்து சேரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ் ?/கண்மணி அன்போடு பாடலை பயன்படுத்தியதற்கு நோட்டீஸ் ?/இணையத்தில் பொய் தகவல் பரவுவதாக இயக்குநர் விளக்கம் 

Tags:    

மேலும் செய்திகள்