ஐரோப்பாவில் ரீ ரிலீஸ் செய்யப்படும் விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என அறிவிப்பு

Update: 2024-05-25 14:13 GMT

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம், கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக, ஐரோப்பாவில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகவில்லை. இப்படத்தின் ஓவர்சீஸ் உரிமையை பெற்றுள்ள ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், மாஸ்டர் படத்தை ஐரோப்பாவில் வெளியிட போவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே விஜய்யின் கில்லி திரைப்படம் ரீ ரிலிஸில் வசூல் சாதனை புரிந்த நிலையில், மாஸ்டர் ரீ ரிலீசும் ஐரோப்பாவில் வசூல் சாதனை புரியும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்