"எந்தா சாரே.." - தலைவர் 170 ஷூட்டிங்கில் ரஜினியை பார்க்க படையெடுத்த மலையாள பிரபலங்கள்

Update: 2023-10-09 02:11 GMT

கேரளாவில் உள்ள நடிகர் ரஜினிகாந்தை மலையாள பிரபலங்கள் பலரும் சந்தித்து வருகின்றனர்.

"தலைவர் 170" படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக, ரஜினிகாந்த் திருவனந்தபுரத்தில் உள்ளார். இந்நிலையில், மலையாள இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப், ரஜினியை சந்தித்து ஆசி பெற்றார். இதேபோல், மலையள நடிகர் ஜெயசூர்யாவும் சந்தித்துள்ளார். சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை இருவரும் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்