நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா

Update: 2024-05-24 03:14 GMT

தனக்கு கோல்டன் விசா வழங்கியுள்ள யூஏஇ அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்....

தமிழ், மலையாளம் மற்றும் பாலிவுட் நடிகர்கள் பலருக்கு

ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு அபுதாபி அரசு கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது. தனக்கு விசா வழங்கி கவுரப்படுத்திய அபுதாபி அரசுக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், அபுதாபியில் புதிதாக கட்டப்பட்ட இந்து கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த அவர், அப்பகுதியில் உள்ள பிரமாண்ட மசூதியையும் பார்வையிட்டார். இதனிடையே, கோல்டன் விசா வழங்கி சிறப்பித்த ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டுள்ளார்..

Tags:    

மேலும் செய்திகள்