இன்று வெளியாகிறது பீஸ்ட் டிரைலர் - Beast Mode-ல் காத்திருக்கும் ரசிகர்கள்!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

Update: 2022-04-02 06:57 GMT
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ள இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் ஏற்கனவே வெளியான அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், இன்று வெளியாகும் இத்திரைப்படத்தின் டிரைலரை காண ரசிகர்கள் பீஸ்ட் மோடில்(BEAST MODE) காத்திருக்கின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்