பொருளாதார நெருக்கடியால் வெடித்த வன்முறை... இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வீடு முற்றுகை

இலங்கை தலைநகர் கொழும்பில் அதிபர் ராஜபக்சேவின் வீடு முற்றுகையிடப்பட்டதை தொடர்ந்து கொழும்பு நகரில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

Update: 2022-04-01 01:43 GMT
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். அன்றாட தேவைகளை கூட சமாளிக்க முடியாத சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் கடும் அதிருப்தியில் உள்ள மக்கள், வரலாறு காணாத விலை ஏற்றத்தை கண்டித்து, இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வீட்டின் முன்பு பெருந்திரள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகைக்குண்டுகளை வீசிய போலீசாரின் வாகனங்களை கற்களால் தாக்கி, ராணுவ வாகனத்தை தீயிட்டு கொளுத்திய போராட்டக்காரர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸ் தாக்குதல் காரணமாக, ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போராட்டம் கலவரமாகியதை தொடர்ந்து, மறு அறிவிப்பு வரும் வரை கொழும்பு நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் பதற்றமான சூழல் நிலவுவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்