இயக்குநர் வெங்கட் பிரபுவின் "மன்மத லீலை" - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

இயக்குநர் வெங்கட் பிரபுவின் 10வது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Update: 2022-01-16 10:26 GMT
நடிகர் சிம்புவை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. மாநாடு படத்துக்குப் பிறகு மன்மத லீலை என்ற படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். அடல்ட் நகைச்சுவையை மையப்படுத்தி இந்தப் படம் இயக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், மன்மத லீலை படத்தின் பர்ஸ்ட் லுக்கை டுவிட்டரில் இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்