'அய்யப்பனும் கோஷியும்' படத்திற்கு விருது - பினாராயி விஜயன் வழங்கினார்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், கேரள அரசின் 51வது மாநில திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2021-11-30 07:37 GMT
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், கேரள அரசின் 51வது மாநில திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. கேரள அரசால் மலையாள திரையுலகின் சிறந்த நட்சத்திரங்களுக்கு வழங்கப்படும் இந்த விருதினை, முதலமைச்சர் பினராயி விஜயன் வழங்கினார். இதில் 
சிறந்த நடிகருக்கான விருதை ஜெய சூர்யாவும், சிறந்த நடிகைக்கான விருதை அன்னா பென்னும் பெற்றனர். 
இதேபோல், சிறந்த இயக்குனருக்கான விருதை சித்தார்த் சிவா பெற்ற நிலையில், சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதை சுதீஷும், சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதை ஸ்ரீரேகாவும் பெற்று கொண்டனர். பிரபல திரைப்படத்திற்கான விருது அய்யப்பனும் கோஷியும் படத்திற்கு வழங்கப்பட்ட நிலையில், விருதை மறைந்த இயக்குனர் சச்சியின் மனைவி சிஜி பெற்று கொண்டார். சிறந்த இசை அமைப்பாளர் எம்.ஜெயச்சந்திரன், எடிட்டர் மகேஷ் நாராயணன் என பல்வேறு பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்