மாஸ்டர் டீசர் - தீபாவளியன்று வெளியாகும் என அறிவிப்பு
நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் தீபாவளியன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் படத்தின் வெளியீடு, கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி போனது. தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதால், மாஸ்டர் படத்தின் டீசர், தீபாவளியன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.