மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

Update: 2020-09-05 06:37 GMT
மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பிளாக் பேந்தர் திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஈர்த்த அமெரிக்காவின் சாட்விக் போஸ்மேனுக்கு தெற்கு கரோலினா பகுதியில் உள்ள சொந்த ஊரான ஆண்டர்சனில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஓவியமாக வரையப்பட்ட அவரது படத்துடன் திரைப்படம் ஒளிப்பரப்பு செய்தனர். உடல் நலக்குறைவால் 43 வயதான போஸ்மேன் மறைந்த நிலையில், இதை ஏற்க முடியாமல் தவிக்கும் அவரது ரசிகர்கள், படத்தை பார்த்தவாறு கண்ணீர் சிந்தினர். சிலர் விம்மி அழுதது உருக்கமாக இருந்தது.
Tags:    

மேலும் செய்திகள்