பாவாடை தாவணியில் திருமலையில் நடிகை ஜான்வி சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி சாமி தரிசனம் செய்தார்.;
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, சாமி தரிசனம் செய்தார். நடை பயணமாக திருமலை வந்த ஜான்வி ஏழுமலையானை தரிசிக்க பாவாடை - தாவணி உடையில் வந்திருந்தார். பின்னர் சிறப்பு தரிசனம் மூலம் சாமி தரிசனம் செய்த அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாத லட்டு வழங்கப்பட்டது. ஏற்கனவே ஜான்வி நடிப்பில் வெளியான "தடக்" திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில், தற்போது அவரின் 3 படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.