கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

Update: 2019-07-30 03:50 GMT
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில், முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கிறார். தார் மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம், அடுத்த ஆண்டு வெளியாகிறது. எம்.எஸ்.ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார். படம் குறித்து விஜய் சேதுபதி கூறுகையில், 'கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை கதையில், அவரது கேரக்டரில் நடிக்க இருப்பது உண்மையிலேயே சவாலான விஷயம்தான். முத்தையா முரளிதரனும் படத்தில் நடிக்கிறார். அவர் எனக்கு கிரிக்கெட் விளையாட பயிற்சி அளிக்கிறார்' என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்