அம்மாவோடு தான் இருப்பேன் - நடிகை வனிதா மகள் வாக்குமூலம்

அம்மாவோடு தான் இருப்பேன் என நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜெனிதா, தெலுங்கானா போலீசார் நடத்திய விசாரணையில் கூறியுள்ளார்.;

Update: 2019-07-03 18:57 GMT
நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகையுமான வனிதா விஜயகுமாருக்கும், ஆனந்தராஜுக்கும் கடந்த 2007 ஆம் ஆண்டு, திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் ஜெனிதா என்ற மகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவகாரத்து செய்தனர். விவாகரத்துக்கு பின் மகள் ஜெனிதா தந்தை ஆனந்தராஜுடன் தெலுங்கானாவில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிக்கு சென்ற மகளை கடத்தி சென்று விட்டதாக தெலுங்கானா போலீஸ் நிலையத்தில் ஆனந்தராஜ் புகார் அளித்துள்ளார். 
புகாரின் பேரில், சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் தொலைக்காட்சி அரங்கிற்குள், போலீசார் வனிதாவிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர், மகள் ஜெனிதாவிடம் தெலுங்கானா மாநில மனித உரிமை ஆணைய துணை தலைவி, மற்றும் காவல்துறை ஆய்வாளர் முன்பு வாக்குமூலம் பெறப்பட்டது. இதில், தாம் தந்தையை பார்க்கவோ, பேசவோ விரும்பவில்லை என்றும் தாயுடன் இருக்க விரும்புவதாக கூறியுள்ளார்.  சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்த தெலுங்கானா போலீசார் இது குறித்து ஆனந்தராஜிடம் தெரிவித்தனர். இதையடுத்து வனிதா விஜயகுமாரின் மகளை பாதுகாப்பாக அவரது வக்கீல்கள் அங்கிருந்து அழைத்து சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்