விஜய்யின் "பிகில் " : 3 - வது போஸ்டர் வெளியீடு

அட்லீ இயக்கத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கும் பிகில் படத்தின் 3 - வது போஸ்டர், கெத்து காட்டுவதாக அமைந்துள்ளது.;

Update: 2019-06-23 14:39 GMT
அட்லீ இயக்கத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கும் பிகில் படத்தின் 3 - வது போஸ்டர், கெத்து காட்டுவதாக அமைந்துள்ளது. MICHAEL என எழுதப்பட்ட ஜெர்சியுடன் லுங்கி கட்டி இருக்கும் விஜய், கையில் சைக்கிள் செயினுடன் கலவரத்தை எதிர்கொள்ளும் வகையில், இந்த போஸ்டர் வடிவமைக்கப் பட்டு உள்ளது. பிகில் படம் பற்றி, சுவாரஸ்யமான போஸ்டர்களை அவ்வப்போது, வெளியிட்டு, ரசிகர்களை திக்குமுக்காடச் செய்ய, படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏ. ஆர். ரஹ்மான் இசையில் நயன்தாரா  நடிக்கும் பிகில் படத்தில் பாலிவுட் நடிகர் JACKIE SHROFF, காமெடி நடிகர் விவேக் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்