தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி மரணம்
விஜயா வாகினி ப்ரொடக்ஷன் நாகிரெட்டியின் மகன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி உயிரிழந்தார்.;
விஜயா வாகினி ப்ரொடக்ஷன் நாகிரெட்டியின் மகன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி உயிரிழந்தார். வெங்கட்ராம ரெட்டிக்கு வயது 75. இவருக்கு ஒரு மகனும் ,இரு மகள்களும் உள்ளனர். இவர் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், பைரவா ஆகிய 5 படங்களை தயாரித்துள்ளார். இவரது இறுதி அஞ்சலி சென்னை நெசப்பாக்கத்தில் நாளை காலை 7 .30 முதல் 9 மணி வரை நடைபெறவுள்ளது