ஐரோப்பா செல்லும் ரஜினி படக்குழு

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்புகள் டார்ஜிலிங், டேராடூன் மற்றும் சென்னையில் நடந்து வந்தது.

Update: 2018-09-02 06:26 GMT
நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் டார்ஜிலிங், டேராடூன் மற்றும் சென்னையில் நடந்து வந்தது. சென்னை பின்னி மில்லில் ஒரு சண்டை காட்சியுடன் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் லடாக் மற்றும் ஐரோப்பாவில் நடக்க இருப்பதாகவும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்