திட்டமிட்டபடி இன்று வெளியாகிறது, 'விஸ்வரூபம் - 2'

விஸ்வரூபம் - 2 திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி பிரமீட் சாய்மீரா நிறுவனம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

Update: 2018-08-10 01:05 GMT
விஸ்வரூபம் - 2 திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி பிரமீட் சாய்மீரா நிறுவனம் தொடர்ந்த  வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 'மர்மயோகி' திரைப்படத்துக்கான 4 கோடி ரூபாயை  முறையாக செலவிடாமல், வேறு படத்திற்கு அந்தத் தொகையை நடிகர் கமல்ஹாசன் செலவிட்டு உள்ளதாகவும், வட்டி சேர்த்து 5 கோடியே 44 லட்சம் ரூபாய் திருப்பி செலுத்தவும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கு விசாரணையின்போது, ஆஜரான கமல் தரப்பு வழக்கறிஞர், 'மர்மயோகி' படப்பணிகள் முடிந்த பிறகு, தொகையை அளித்த பின்னர் தான் வெளியிடப்படும் என  தெரிவித்தார். இதனையடுத்து, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் விஸ்வரூபம் 2 திரைப்படம் இன்று வெளியாகிறது.
Tags:    

மேலும் செய்திகள்