சிவாஜி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்ததற்கு முதலமைச்சருக்கு தெரிவித்தோம் - நடிகர் சங்க நிர்வாகிகள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்தனர்.

Update: 2018-07-25 08:31 GMT
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் சந்தித்தனர். நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைத்து கொடுத்ததற்கும், அவரின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்ததற்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சங்க நிர்வாகி பொன்வண்ணன், நூற்றாண்டு கண்ட திரைத்துறை மற்றும் நாடக நடிகர்களின் வாரிசுகளுக்கு நிதி வழங்க வேண்டும் என்றார். நடிகர் சங்க கட்டடம் கட்டுமான பணி நடைபெற்று வருவதாகவும், சில மாதங்களில் அந்த பணிகள் நிறைவு பெறும் என்றார்... 


Tags:    

மேலும் செய்திகள்