ரஜினி கதையில் நடிக்கிறார் விஜய்
பதிவு: ஜூன் 15, 2018, 11:11 AM
விஜய் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக்கை, அவரது பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி, வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த படம், ரஜினி நடிக்க இருந்த கதை என்ற தகவல் வெளியாகி உள்ளது. 'கபாலி'க்குப் பிறகு, முருகதாஸிடம், கதை கேட்ட ரஜினி, அவரைக் கட்டிப்பிடித்து, கண்டிப்பாக இதில் நடிப்பதாக, நெகிழ்ச்சியோடு கூறியிருந்தார். அது, ஆக்‌ஷன் கலந்த அரசியல் கதையாகும். ஆனால், முருகதாஸ் 'ஸ்பைடர்' படத்தில் இருந்ததால், ரஜினியை இயக்கும் வாய்ப்பு மீண்டும் ரஞ்சித்துக்கே சென்றுவிட்டது. அப்படி ரஜினிக்காக உருவாக்கிய கதையில், விஜய்யை நடிக்க வைத்துள்ளார், முருகதாஸ்.