எம்ஐடி ஆளில்லா விமான சோதனை : ஆலோசகராக நடிகர் அஜித் நியமனம்

அண்ணா பல்கலைக்கழக ஆளில்லா விமான சோதனை ஆலோசகராக நடிகர் அஜித் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2018-05-04 11:46 GMT
ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தில் ஆளில்லா விமானம் தொடர்பான போட்டிகள் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி 
பிரிவு மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக நவீன ஆளில்லா விமானம் ஒன்றை அவர்கள் உருவாக்குகின்றனர். மருத்துவ துறைக்கு உதவும் அந்த அமைப்பின் ஆலோசகராக நடிகர் அஜித் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு முறை பயிற்சி அளிக்க ஆயிரம் ரூபாய் கட்டணம் பெறும் அஜித், அதனை ஏழை மாணவர்களின் கல்வி செலவுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்