விளையாட்டு திருவிழா - (12.10.2018) - இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் - மேற்கிந்தியத் தீவுகள் அணி நிதான ஆட்டம்

விளையாட்டு திருவிழா - (12.10.2018) - இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
விளையாட்டு திருவிழா - (12.10.2018) - இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் - மேற்கிந்தியத் தீவுகள் அணி நிதான ஆட்டம்
x
இந்திய அணியில் முகமது ஷமிக்கு பதிலாக அறிமுக வீரர் ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க வீரர்களான BREATHWAITE, POWELL ஆகியோர் மன உறுதியுடன் இந்திய பந்துவீச்சை எதர்கொண்டு ரன்களை சேர்த்தனர். POWELL 22 ரன்களில் ஆட்டமிழக்க, SHAI HOPE நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் HOPE 36 ரன்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட AMBRIS,HETMYER அடுத்தடுத்து ஆட்டமிழக்க மேற்கிந்தியத் தீவுகள் அணி 113 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய ROSTON CHASE  நங்கூரம் பாய்த்து நின்று ரன்களை சேர்த்தார். அவருக்கு கேப்டன் JASON HOLDER துணை நிற்க மேற்கிந்தியத் தீவுகள் அணி சரிவிலிருந்து மீண்டது. JASON HOLDER 52 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்ட நேர முடிவில் ROSTON CHASE 98 ரன்கள் குவித்து களத்தில் நின்றார். மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்களை எடுத்துள்ளது. முதல் டெஸ்ட்டை விட மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் சற்று பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அறிமுக போட்டியில் களமிறங்கிய வேகப்பந்துவீச்சாளர் சர்துல் தாக்கூர் 10 பந்துகள் வீசிய நிலையில் காயம் காரணமாக வெளியேறியது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

வேக்போர்ட் அலைச்சறுக்கு என்றால் என்ன ?

சாதாரண அலைச்சறுக்கிற்கும், WAKEBOARD அலைச்சறுக்குக்கம் என்ன வித்தியாசம் என்ன தெரியுமா? அலைச்சறுக்கு என்பது பொங்கி எழும் அலையில் வீரர்கள் சறுக்குவார்கள். ஆனால் WAKEBOARD அலைச்சறுக்கில் ஒரு மோட்டார் படகில் கட்டப்பட்டுள்ள கயிற்றை வீரர்கள் பிடித்து அலைச்சறுக்கில் ஈடுபடுவார்கள். அலையின் வேகம் பொருட்டே அலைச்சறுக்கு சாகசம் அமையும். ஆனால்  WAKEBOARD SURFING ல் மோட்டார் படகு, மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதால், அதே வேகத்தில் WAKEBOARDல் வீரர்கள் SURFING-ஐ மேற்கொள்வார்கள். WAKEBOARD SURFING ஐ சாகசத்திற்காகவும் வீரர்கள் மேற்கொள்வார்கள். ஆஸ்திரியாவில் உள்ள கைவிடப்பட்ட குவாரியில்  .கற்பாறைகள் மற்றும் இடிபாடுகளுக்கு இடையே அபாயகரமான சூழலில் WAKEBOARD SURFING ல் வீரர்கள் ஈடுபட்ட காட்சி அண்மையில் சமூக வலைத்தளத்தில் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்டது. Wakeboard Surfing 1970 மற்றும் 80ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக இருந்தது. கிரிக்கெட்டிற்கு ஐ.சி.சி. போல் இந்த விளையாட்டை INTERNATIONAL WAKEBOARD FEDEREATION நிர்வகித்து வருகிறது. 2001ஆம் ஆண்டு முதல் இந்தப் போட்டி உலக விளையாட்டு தொடரில் இணைக்கப்பட்டது. 

மகளிருக்கான உலக அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்

பிரான்சில் நடைபெற்ற தொடரில் 6 முறை உலக சாம்பியனான அமெரிக்க வீராங்கனை கில்மோர் பங்கேற்றார். பரபரப்பான மூன்றாவது சுற்று ஆட்டத்தில் கில்மோர், அலைச்சறுக்கில் ஈடுபட்டார். ஆனால், அவர் சிறு தவறு செய்ததால் அவர் குறைவான புள்ளிகளையே பெற்றார். இதன் காரணமாக மூன்றாவது சுற்றில் அவர் தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறினார். அவருக்கு கடும் போட்டி அளிக்கக் கூடிய வீங்கனையாக திகழ்ந்த பீட்டர்சனும் தோல்வியை தழுவினார். இதனால் அமெரிக்க வீராங்கனைகள் பீட்டர்சன், கில்மோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. நடப்பாண்டின் கடைசி தொடரில் இவ்வீராங்கனைகளில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் சாம்பியன் பட்டத்தை வெல்வார்கள். நட்சத்திர வீராங்கனைகள் மூன்றாவது சுற்றிலேயே வெளியேறிய போதிலும் மற்ற வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இந்த தொடரில் ஆஸ்திரேலிய வீராங்கனை MACY CALLAGAN அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இளம் வீராங்கனையான அவர், முதல் முறையாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 



Next Story

மேலும் செய்திகள்