விளையாட்டு திருவிழா - (11.10.2018) - இந்தியா Vs மே.இ.தீவுகள்- நாளை 2வது டெஸ்ட்
பதிவு : அக்டோபர் 11, 2018, 08:22 PM
விளையாட்டு திருவிழா - (11.10.2018) - இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாளை ஐதராபாத்தில் தொடங்குகிறது.  முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, முன்னாள் வீரர்களிடமிருந்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில், காயத்திலிருந்து குணமடைந்த JASON HOLDER, KEMER ROACH ஆகியோர் 2வது டெஸ்ட்டில் களமிறங்குவது மேற்கிந்தியத் தீவுகளுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. பேட்டிங், பந்துவீச்சு என அசுர பலத்துடன்  இந்திய அணி உள்ளது.. 

இந்தப் போடடியிலும் பங்கேற்கப்போகும் வீரர்களின் பட்டியலை இந்திய அணி முகூட்டியே அறிவித்துள்ளது. அதில் மாயாங் அகர்வால், முகமது ஷிராஜ், விஹாரி ஆகியோருக்கு இடமில்லை.

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதாகவும், ஐ.பி.எல். தொடரில் விளையாடியுள்ள அனுபவம் அவர்களுக்கு பெரிதும் கைக் கொடுப்பதாக  விராட் கோலி தெரிவித்துள்ளார். 

நாளை தொடங்கும் டெஸ்ட் போட்டியை வென்று தொடரை 2க்கு0 என்ற கணக்கில் இந்தியா  எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நோயை வென்று சாதனை படைத்த வீரர்

JUSTIN GALLEGOS ..  அமெரிக்காவை சேர்ந்த 20 வயதான தடகள வீரர்..  ஆனால்.. JUSTIN GALLEGOS க்கு CEREBERAL PALSY என்ற நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டவர். 

எழுந்து நிற்கவே JUSTIN ஆல் முடியாது என்று மருத்துவர்கள் கூற, தனது மன உறுதியால் JUSTIN  எழுந்து நின்றார். அத்துடன் நிற்காமல் ஓடவும் செய்தார் JUSTIN..  நரம்பு தள்ர்ச்சியால் பாதிக்கப்பட்டாலும், தடகளத்தில் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் பயிற்சி செய்தார் JUSTIN.. பயிற்சியின் போது தொடர்ந்து நிற்க முடியாமல் கீழே விழுந்து..மறுகனமே எழுந்து நின்று மீண்டும் பயிற்சியை தொடங்குவாராம் JUSTIN.. 

பயிற்சி காலத்தில் என்றுமே காயம் இல்லாமல் வீடு திரும்பியதில்லை. ஆனால் ஜஸ்டினின் மன உறுதி அவரை மீண்டும் பயிற்சி களத்திற்கு கொண்டு சென்றது. 


பள்ளி, கல்லூரி காலத்தில் நடைபெறும் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளும் ஜஸ்டின், கடைசியாக பந்தயத்தை முடிப்பார். ஆனால் , முதலில் பந்தயத்தை முடிப்பவருக்கு விழும் கைத்தட்டை விட, ஜஸ்டினுக்கு தான் அதிகளவு கைத்தட்டு கிடைக்கும்.

தனது 18வது வயதில் நெடுந்தூர பந்தயத்தில் பங்கேற்கும் முடிவை எடுத்தார் ஜஸ்டின். வேகமாக ஓட முடியவில்லை என்றாலும், நீண்ட நேரத்திற்கு ஒரே வேகத்தில் ஓடும் திறமையை வளர்த்து கொண்டார் ஜஸ்டின்.. இது அவருக்கு கையும் கொடுத்தது.

HALF MARATHON போட்டியை 2 மணி நேரத்திற்கு ஓடி முடிக்க வேண்டும் என்ற கனவுடன் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார் ஜஸ்டின். இந்த நிலையில், பிரேத்யேக காலணியும், ஸ்பான்சர்ஷிப் கிடைத்தால் வாழ்க்கையை வென்றுவிடலாம் என்ற ஐஸ்டின் முயற்சி செய்தார். இதனை அறிந்த NIKE நிறுவனம், ஐஸ்டின் கலந்து கொண்ட பந்தயத்திற்கு நேரில் சென்றது.

ஐஸ்டின் பந்தயத்தை முடித்தவுடன், ஸ்பான்சராக உங்களை ஏற்று கொள்ள தயார் என்று அந்த நிறுவனம் அறிவித்தவுடன், கண்ணீர் விட்டு கதறி அழுதார் JUSTIN.. 

இதன் மூலம் நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட வீரர் ஒருவருக்கு ஸ்பான்சர்ஷிப் கிடைத்தது இதுவே முதல் முறை.. இனி JUSTIN பயிற்சியையும், போட்டியிலும் கலந்து கெண்டாலே போதும், அதற்கு ஆகும் செலவை NIKE நிறுவனம் ஏற்றுக் கொள்ளும். எழுந்து நிற்கவே முடியாத வீரர் தற்போது, தொழில்முறை தடகள வீரராக மாறி மற்றவர்களுக்கு ஒரு பாடம்க திகழ்கிறார்.. 

பிரபலமாகி வரும் கோடரி எறிதல் போட்டி

வில் வித்தை விளையாட்டில் உள்ள இலக்கை போல், மரத்தால் ஆன இலக்கு அமைக்கப்பட்டி இருக்கும். இதனை நோக்கி கோடரியை வீரர், வீராங்கனைகள் எறிய வேண்டும்.. இதில் முக்கியமான விதி என்ன தெரியுமா..?? கோடரி இலக்கை தாக்கி, சுவற்றிலே நிற்க வேண்டும்... இலக்கை தாக்கி கோடரி கீழே விழுந்தால் போட்டியாளர்கள் தோல்வி அடைந்துவிட்டார்கள் என்று அர்த்தம்...

செல்போன்களை மட்டும் பயன்படுத்தி சொம்பேறியாக மாறியுள்ள இளைஞர்களுக்கு, இந்த விளையாட்டு நல்ல மருந்தாக இருக்கும் என்றும் AXE THROWING பயிற்சியாளர்கள் கூறுகின்றனர். சிலர் இந்த சாகசத்தை செல்போனில் படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதற்காகவே கோடரியை வீசுகின்றனர்.

சுமார் 3 கிலோ எடையுள்ள கோடரியை  வீசும் போது பலரும் வெற்றிப் பெறுவதில்லை. இதனால் பயிற்சியாளர்கள் களத்தில் நின்று எப்படி வீச வேண்டும் என்றும் வழிநடத்துகின்றனர். 

இந்த விளையாட்டை யார் அதிகளவில் விளையாட ஆர்வம் காட்டுகிறார்கள் தெரியுமா? காதல் முறிவு மற்றும், திருமண முறிவு ஏற்பட்ட பெண்கள் தான்.. காதலன் மற்றும் கணவர்களை நினைத்து கோடரியை கோபமாக வீசினால், பெண்களின் கோபம் மாயமாகி விடுமாம்..

இளையோருக்கான ஒலிம்பிக் போட்டி : ஒரே நாளில் ரஷ்யாவுக்கு 5 தங்கம்

இளையோருக்கான ஒலிம்பிக் போட்டி நீச்சல் பிரிவில் ரஷ்ய ஒரே நாளில் 5 தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. 50 மீட்டர் BACKSTROKE பிரிவில் ரஷ்ய வீரர் Kolesnikov தங்கம் வென்றார். இதே போன்று 400 மீட்டர் நீச்சல் ரிலே பிரிவில் ரஷ்யா தங்கம் வென்றது. மகளிருக்கான 100 மீட்டர் BACKSTROKE பிரிவில் ரஷ்ய வீராங்கனை MAKAROVA தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.


தொடர்புடைய நிகழ்ச்சிகள்

ஒரு விரல் புரட்சி - 04.12.2018 : தமிழகத்திற்குள் வரமுடியாது - ஸ்டாலின் எச்சரிக்கை

ஒரு விரல் புரட்சி - 04.12.2018 : "முதலமைச்சர் வேட்பாளர் யார்..?" - முத்தரசனின் பரபரப்பு பேச்சு

55 views

விளையாட்டு திருவிழா - 29.10.2018 - அதிரடி சரவெடியை கொளுத்திய ரோஹித்

விளையாட்டு திருவிழா - 29.10.2018 - சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் தொடர், சாம்பியன் பட்டத்தை வென்றார் ஃபெடரர்

53 views

பயணங்கள் முடிவதில்லை - 07.10.2018

பயணங்கள் முடிவதில்லை - 07.10.2018

117 views

10.30 காட்சி - 23.09.2018

10.30 காட்சி - 23.09.2018

283 views

குரு

ஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..

103 views

மோடி 4 ஆண்டுகள் (23.08.2018) - பிரதமர் மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் சொன்னதும், செய்ததும்

மோடி 4 ஆண்டுகள் (23.08.2018) - பிரதமர் மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் சொன்னதும், செய்ததும்

125 views

பிற நிகழ்ச்சிகள்

விளையாட்டு திருவிழா (07.12.2018) - இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்

விளையாட்டு திருவிழா (07.12.2018) - அடிலெய்ட் மைதானத்தில் சாகச பயணம்

40 views

விளையாட்டு திருவிழா (06.12.2018) - ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட் : ஆட்டநேர முடிவில் இந்தியா 250-9

விளையாட்டு திருவிழா (06.12.2018) - ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது.

11 views

விளையாட்டு திருவிழா (05.12.2018) - WWE போட்டியில் இந்தியர்களுக்கு வாய்ப்பு!

விளையாட்டு திருவிழா (05.12.2018) - இந்தியா Vs ஆஸி - நாளை முதல் டெஸ்ட்

11 views

விளையாட்டு திருவிழா - 03.12.2018 - ஆஸி. லெவனுக்கு எதிரான பயிற்சி ஆட்டம் - சமன் செய்தது இந்திய அணி

விளையாட்டு திருவிழா - 03.12.2018 - பந்துவீசி விக்கெட்டை வீழ்த்திய கோலி

86 views

விளையாட்டு திருவிழா - 30.11.2018 -சுனாமி போல் உயர்ந்து எழும் அலை

விளையாட்டு திருவிழா - 30.11.2018 - பெண்கள் விரும்பும் சாகச விளையாட்டு

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.