ஈரான் - இஸ்ரேல் சண்டை உலகப்போராக வெடிக்குமா? - அமெரிக்காவின் அறிவிப்பால் மாறியது காட்சி

x

#iranisraelwar #america #israelpalestineconflict

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான் மீது எந்தவித ராணுவ நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலையடுத்து தேசிய பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் அமெரிக்க அதிபர் பைடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் அமெரிக்க அதிபர் பைடன் பேசினார். அப்போது ஈரானின் 99 சதவீத ஏவுகணைகள் பாதுகாப்பு அரண்கள் மூலம் தடுக்கப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்தார். ஆனாலும் மேற்கு ஆசிய பகுதியில் பதற்றம் நிலவி வரும் நிலையில் அமெரிக்காவின் அறிவிப்பு

உலக நாடுகளுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்