சாம்பியன்ஷிப் வெல்லப்போவது யார்? இறைச்சியை வைத்து கணித்த பெண் சிங்கம்..! சுவாரஸ்யமான காட்சி

மகளிர் யூரோப்பியன் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என பெண் சிங்கம் கணித்திருப்பது..
x

மகளிர் யூரோப்பியன் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என பெண் சிங்கம் கணித்திருப்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுதிப்போட்டியில் இங்கிலாந்து - ஜெர்மனி அணிகள் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த, இறுதிப்போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறும் என லண்டன் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் 6 வயதுடைய ஆர்யா என்ற பெண் சிங்கம் கணித்துள்ளது. அதன் முன்பு இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி தேசிய கொடி வண்ணத்தில் இறைச்சிப் பெட்டிகள் வைக்கப்பட்ட நிலையில், சிங்கம் இங்கிலாந்தை தேர்வு செய்து இறைச்சியை ருசித்தது.


Next Story

மேலும் செய்திகள்