சாம்சங் போன் யூஸ் பண்றீங்களா...WhatsApp-ல் புதிய சிக்கல்?

x

சாம்சங் ஸ்மார்ட் போன்களில் PDF ஃபைல்களை பதிவிறக்கம் செய்ய முடிவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. கடந்த 3 நாட்களாக சில சாம்சங் ஸ்மார்ட் போன்களில், வாட்ஸ் ஆப் செயலியின் மூலமாக, PDF ஃபைல்களை பதிவிறக்கம் செய்ய முடிவதில்லை என்று கூறப்படுகிறது. பதிவிறக்கம் செய்ய முயன்றால், பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என்றும், பின்னர் முயற்சி செய்யவும் என்றும் காட்டுவதாக பயனர்கள் தெரிவித்து வருகின்றனர். சில ஸ்மார்ட் போன்களில் PDF ஃபைலை ஓபன் செய்தாலும், ஸ்கிரீனில் கோடுகள் விழுவதாக பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சாம்சங் மற்றும் வாட்ஸ் ஆப் நிறுவனங்களை டேக் செய்து, எக்ஸ் தளத்தில் பயனர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்