"இதை கண்டிப்பா பண்ணுங்க"கனடா வாழ் இந்தியர்களுக்கு எச்சரிக்கை..| Canada | India

x

இந்தியா கனடா விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சில வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது.

அந்த அறிக்கையில், இந்தியாவுக்கு எதிரான வெறுப்புணர்வு பரப்பப்படுவதால் கனடா வாழ் இந்தியர்கள், மாணவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் கூறப்பட்டுள்ளது. இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தொடர்ந்து கனடா அதிகாரிகளுடன் இந்திய தூதரகம் அதிகாரிகள் தொடர்பில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் அங்கே உள்ள தூதரகத்தில் தங்களை பதிவு செய்து கொண்டால் அவசர உதவி தேவைப்படும் பொழுது தொடர்பு கொள்ள எளிதாக இருக்கும் என வெளியுறவு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்