ஒரே APP 9 நாள் மட்டுமேUSE... ரூ.1400 கோடியை வருமானம்... இந்தியாவுக்கு விபூதி அடித்த சீன நபர்

x

போலி கால்பந்து சூதாட்ட செயலியின் மூலம், சீனாவை சேர்ந்த ஒருவர், 9 நாட்களில் ஆயிரத்து 400 கோடி ரூபாயை சுருட்டிய சம்பவம் அம்பலமாகியுள்ளது.

சீனாவை சேர்ந்த வூ யுயான்பே என்பவர், குஜராத்தில் இருந்தபடி, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, போலியான கால்பந்து சூதாட்ட செயலியை உருவாக்கியுள்ளார். இந்த செயலி 9 நாட்கள் மட்டுமே செயல்பட்ட நிலையில், அதற்குள் ஆயிரத்து 400 கோடியை சுருட்டியுள்ளார். கடந்த 2020 முதல் 2022ம் ஆண்டு வரை சீன நபர் இந்தியாவில் இருந்தது தெரியவந்துள்ளது. பதான் மற்றும் பனஸ்கந்தா மாவட்டங்களில் வூ யுயான்பே இருந்ததாகவும், மே 2022-ல் இந்த செயலியை அறிமுகப்படுத்தியதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். டானி டேட்டா என்ற செயலி மூலம் குஜராத், உத்தரபிரதேசத்தில் தனிநபர்களை குறிவைத்து செயல்பட்ட இந்த கும்பல், நாளொன்றுக்கு சராசரியாக 200 கோடியை சுருட்டியுள்ளது. குஜராத் காவல்துறை, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வதற்குள், வூ யுயான்பே இந்தியாவை விட்டு சீனாவுக்குத் தப்பியொடியுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய 9 பேரை குஜராத் சிஐடியின் சைபர் பிரிவு கைது செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்