வானத்தில் செல்லும் போதே வெடித்து சிதறிய விமானம் - நெஞ்சை நிறுத்தும் காட்சிகள்

x

உக்ரைனை ஒட்டிய ரஷ்ய பகுதியான பெல்போராட் பகுதியில், போர்க்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த உக்ரைன் ராணுவத்தை சேர்ந்த 65 பேரை, கைதிகள் பறிமாற்றம் செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர். ரஷ்யாவின் ஐ.எல். 76 ரக ராணுவ விமானத்தில் கைதிகள் உட்பட 75 பேர் பயணித்த, அந்த விமானம், யாப்லனோவா என்ற இடத்தில் சென்ற போது, கீழே விழுந்து வெடித்து சிதறியது. விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டதாகவும், உயிருடன் யாரும் மீட்கப்படவில்லை என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், விமானத்தை, மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஏவுகணைகளை வைத்து உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக, ரஷ்ய முன்னாள் ராணுவ அதிகாரி அன்ட்ரேய் கார்டோபோலோவ் குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்