ஓப்பனாக அடிக்கும் முன்னாள் அதிபர்.. பரம எதிரியின் பரபரப்பு குற்றச்சாட்டு..விழி பிதுங்கி நிற்கும் புதின்....

x

ரஷ்யாவில் மர்மமான முறையில் உயிரிழந்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி, தீரம் மிக்கவர் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். தெற்கு கரோலினாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நவால்னி குறித்து பேசிய டிரம்ப், நவால்னி மிகவும் தைரியமானவர் எனக் கூறினார். ஆனால் நவால்னி மீண்டும் ரஷ்யா சென்று இருக்கக் கூடாது என்றும் டிரம்ப் தெரிவித்தார். நவால்னி மரணம் அடைவார் என்பது ரஷ்ய மக்களுக்குத் தெரியும் என்றும் டிரம்ப் பேசினார். நவால்னியின் மரணத்தில் ரஷ்ய அதிபர் புதினுக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்